நெருங்கும் சட்டமன்ற தேர்தல் ! திமுக மாவட்ட, மாநகர செயலாளர்கள் ஆலோசனை

With the Assembly elections approaching, the DMK District and Municipal Secretaries' Consultative Meeting is being held today.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,இன்று திமுக மாவட்ட, மாநகர செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்  நடைபெறுகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.எனவே 2021-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதுதொடர்பாக திமுக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன்  வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் – ஒன்றிய, நகர,பகுதி,பேரூர்க் கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.அதுபோது மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர,பகுதி,பேரூர்க் கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில்  சட்டமன்ற தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.