காங்கிரஸ் கட்சிக்கு அறிவுரை சொல்வதற்கு முன் முதலில் ‘உண்மையின் கண்ணாடி’யைப் பாருங்கள்! – மல்லிகார்ஜுனே கார்கே

காங்கிரஸ் கட்சிக்கு அறிவுரை சொல்வதற்கு முன் முதலில் ‘உண்மையின் கண்ணாடி’யைப் பாருங்கள் என காங்கிரஸ் தலைவர் ட்வீட்.

காங்கிரஸ் கட்சிக்கு அறிவுரை சொல்வதற்கு முன் முதலில் ‘உண்மையின் கண்ணாடி’யைப் பாருங்கள் என காங்கிரஸ் தலைவர் ட்வீட்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு இன்று நடைபெற்றது. இந்த அமர்வின் போது ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு எதிராக மக்களவையில் தீர்மானம் கொண்டு வந்தார்.

மேலும், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல்காந்தி பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்த தீர்மானத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் முழக்கமிட்டனர். அதேபோல், இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்துக்கு ராகுல்காந்தி பாதிப்பை ஏற்படுத்தியதாக பிரதமர் மோடியும் குற்றம்சாட்டியிருந்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே ட்வீட்

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, நரேந்திரமோடி அவர்களே! சீனாவில் நீங்கள் கூறிய கருத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நீங்கள் கூறியது – “முன்பு, நீங்கள் இந்தியராக பிறந்ததற்காக வெட்கப்பட்டீர்கள். இப்போது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறீர்கள்”

இது இந்தியாவையும் இந்தியர்களையும் அவமானப்படுத்தவில்லையா? உங்கள் அமைச்சர்களுக்கு அவர்களின் நினைவுகளைப் புதுப்பிக்கச் சொல்லுங்கள்! “கடந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ அதைத்தான் இந்தியாவில் பிறவி எடுத்திருக்கிறோம் என்று மக்கள் உணர்ந்த காலம் ஒன்று இருந்தது” என்று தென் கொரியாவில், நீங்கள் சொன்னீர்கள். காங்கிரஸ் கட்சிக்கு அறிவுரை சொல்வதற்கு முன் முதலில் ‘உண்மையின் கண்ணாடி’யைப் பாருங்கள்!’ என பதிவிட்டுள்ளார்.

unknown node