பாஜக என்பது காற்றடைத்த பலூன் – கே.எஸ்.அழகிரி

The BJP is an inflated balloon. It can explode at any time.

பாஜக என்பது காற்றடைத்த பலூன். அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் புத்தாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடினர்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ராகுல் காந்தி இந்தியாவிற்கு எடுத்துக்காட்டான தலைவர். மோடி புதிய விவசாய சட்டத்தை கொண்டுவந்தபோது மதுரைக்கு வந்த அவர் இன்னும் ஒரு வருடத்தில் இந்த மோடி அரசாங்கம் விவசாய சட்டத்தை திரும்பப் பெறும் என்று கூறினார். அது போலவே நடந்தது.

மோடி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் மற்றும் கலாசாரம் சீரழிந்து நிலையில் இதனை சரி செய்யும் ஆற்றல் ராகுல்காந்தி இடம் தான் உள்ளது. பாஜக என்பது காற்றடைத்த பலூன். அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம், அவர்கள் ஒரு கற்பனை கதை. பாஜக ஆளும் கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதுபோல நாட்டிலிருந்து பாஜக அகற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.