PM Modi Tweets: திரிபுரா மற்றும் நாகாலாந்தில் ஆட்சி அமைக்கும் பாஜக பிரதமர் மோடி ட்வீட்

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மேகாலயா தவிர மற்ற இரு மாநிலங்களில் ஆட்சி அமைக்கிறது.இந்த வெற்றி குறித்து

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மேகாலயா தவிர மற்ற இரு மாநிலங்களில் ஆட்சி அமைக்கிறது.இந்த வெற்றி குறித்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

நாகாலாந்தில் பாஜக-என்டிபிபி கூட்டணி வெற்றி குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.  இரட்டை எஞ்சின் அரசாங்கம் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடும். இந்த முடிவை உறுதி செய்த பாரதீய ஜனதா கட்சி ஊழியர்களின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

பிஜேபி என்டிபிபி கூட்டணி 37 இடங்களிலும் நாகா மக்கள் முன்னணி 2 மற்ற இதர கட்சிகள் 21 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

unknown node

நன்றி திரிபுரா! இது முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கான வாக்குமாநிலத்தின் வளர்ச்சிப் பாதையைத் தொடரும். அனைத்து திரிபுரா பாஜக தொண்டர்களுக்கும்  அடிமட்டத்தில் அவர்களின் அற்புதமான முயற்சிகளுக்காக நான் பெருமைப்படுகிறேன்.

இங்கு பாஜக 33 இடங்களிலும் இடதுசாரி -காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களிலும் திப்ரா மோதா கட்சி 13 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

unknown node

மேகாலயாவின் வளர்ச்சிப் பாதையை மேம்படுத்தவும், மாநில மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தவும் கடினமாக உழைத்துக்கொண்டே இருப்போம். பாஜக தொண்டர்களின்  முயற்சிக்கு நான் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்  என்று ட்வீட் செய்துள்ளார்.

மேகலாயாவில் பாரதீய ஜனதா கட்சி 2 இடங்களில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது.தேசிய மக்கள் கட்சி 60 தொகுதிகளில் 25 இல் முன்னிலையில் உள்ளது.

unknown node