பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை ஆலோசனை..?

It has been reported that BJP state president Annamalai will hold a consultation on the local government elections tomorrow.

உள்ளாட்சித் தேர்தல் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை ஆலோசனை நடத்தவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து பாஜக மாவட்ட தலைவர்களுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை ஆலோசனை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணி, உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.