#BREAKING: கே.எஸ் அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tamil Nadu Congress Committee Chairman KS Alagiri has been diagnosed with corona infection. KS Alagiri has been admitted to a private hospital

உலகம் முழுவதும் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்க தடுப்பூசிகள்  பரிசோதனை செய்யப்பட்டு  வருகிறது. சில தடுப்பூசிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த கொரோனா வைரசால் பல அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சில தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து உள்ளனர் இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் கே.எஸ்.அழகிரி அனுமத்திக்கப்பட்டுள்ளார். 3 தினங்களுக்கு முன் கே.எஸ்.அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.