#BREAKING : நடிகர் கமலஹாசன் – முதலமைச்சருடன் சந்திப்பு...!

விக்ரம் பட வெற்றியை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கமலஹாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

விக்ரம் பட வெற்றியை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கமலஹாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் நடிகைகள்,காயத்திரி, மைனா நந்தினி, ஷிவானி நாரயணன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. நாளுக்கு நாள் விக்ரம் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இதைபோல் வசூலிலும் படம் சக்கபோடுபோட்டு வருகிறது. இந்நிலையில், வெளியான நாளிலிருந்து தற்போது வரை கோடி கணக்கில் வசூல் செய்து வருகிறது.

இந்த நிலையில், விக்ரம் பட வெற்றியை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கமலஹாசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.