#breaking: அசாம் மாநிலத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலை.!

The BJP, the ruling party in Assam, continues to dominate.

அசாம் மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜக தான் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை பொது தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் களம் கண்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அசாமில் ஆளும் கட்சியான பாஜக தான் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 126 தொகுதிகளில் பாஜக 85 தொகுதிகளில் முன்னிலை வகித்து உள்ளது. காங்கிரஸ் கூட்டணி  39 இடங்களிலும், மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னணி வகித்து வருகிறது.