#BREAKING : மணிப்பூர் கலவரம் – 10 எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு கடிதம்...!

10 opposition parties write to PM Modi regarding Manipur riots

pm modi odisa

மணிப்பூர் கலவரம் தொடர்பாக 10 எதிர்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம்

மணிப்பூரில் சமீப நாட்களாக தொடர்ந்து கலவரம் நீடித்து வரும் நிலையில், மணிப்பூர் கலவரம் தொடர்பாக 10 எதிர்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். காங்கிரஸ், ஜேடியு, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 எதிர்கட்சிகள் கடிதம் எழுதி உள்ளனர்.

அந்த கடிதத்தில், அனைத்து சமுதாய மக்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மணிப்பூரில் தனி நிர்வாகம் நடத்தப்படுவதை எதிர்ப்பதாகவும் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.