#Breaking : இனி பேக்கரிகள் மட்டுமல்ல இனிப்பு, காரம் விற்பனை செய்யும் கடைகளும் இயங்கலாம்!

The curfew in Tamil Nadu has been extended till June 21. Accordingly, shops selling sweets have been sanctioned in 27 districts.

தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 27 மாவட்டங்களில் இனிப்பு கார வகை விற்கும் கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஏற்கனவே சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், இந்த ஊரடங்கை மேலும், ஜூன் 21 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. அதன் படி கொரோனா அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்களுக்கு பார்சல் மூலம் உணவு வழங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது போல, தற்பொழுது இனிப்பு மற்றும் கார வகை விற்பனை செய்யக்கூடிய கடைகளுக்கும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இனிப்பு கார வகைகள் பார்சலில் மட்டுமே விற்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

unknown node
#Breaking : இனி பேக்கரிகள் மட்டுமல்ல இனிப்பு, காரம் விற்பனை செய்யும் கடைகளும் இயங்கலாம்!