கொள்முதல் செய்யப்படும் நெல்ஈரப்பதத்தின் அளவை 19%ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு.
கடந்த 11-ஆம் தேதி, தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோரி மத்திய உணவுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில், 22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு, கடந்த 15-ஆம் தேதி தமிழகத்திற்கு வந்தது. தமிழக அரசின் கோரிக்கை அடிப்படையில், தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இக்குழு ஆய்வு மேற்கொண்டது.
இந்த நிலையில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 17%ல் இருந்து 22% ஆக உயர்த்த ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில், 19% ஆக உயர்த்தி ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.