செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தொடக்கம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி மேகலா நேற்று ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நேற்று விசாரிக்கப்படவிருந்த நிலையில், செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க இருந்த நீதிபதி சக்திவேல் விலகினார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரிப்பதற்காக, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில், செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தொடங்கியுள்ளது.
