ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ரூ.5000 கோடி அளவிலான திட்டங்களை தொடங்க வைப்பதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
பிரதமரை வரவேற்ற ஆளுநர், முதல்வர்
ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். அவர்களுடன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜி.கே.வாசன் ஆகியோரும் பிரதமரை வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்தில் வெளியே வந்த பிரதமர் மோடி மக்களை பார்த்து கையசைத்தார். இன்னும் சற்று நேரத்தில், புதிய விமான நிலையம் திறக்கப்படவுள்ளது.