#BREAKING : எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் தொடரும் சோதனை..! கோவையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்...!

கோவை வடவள்ளியில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்  சந்திர சேகர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது.

கோவை வடவள்ளியில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்  சந்திர சேகர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ 1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவருக்கு சொந்தமான 53 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவை வடவள்ளியில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சந்திர சேகர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. அவரது வீட்டில் வரவு, செலவு புத்தகம் உள்பட ஆவணங்களை கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். கோவையை பொறுத்தவரையில் 35 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.