இடைதேர்தலால் மாற்றம் ஏற்படும் – செங்கோட்டையன்

ஈரோடு கிழக்கு இடைதேர்தலால் எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்

ஈரோடு கிழக்கு இடைதேர்தலால் எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்

திருமகன் ஈவேரா மறைவையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

unknown node

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடைபெறுவதையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் , பொன்னையன், தம்பிதுரை எம்பி, ஆகியோர் உட்பட 46 பேர் அடங்கிய குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

unknown node

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செங்கோட்டையன் அவர்கள், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இந்த இடைதேர்தலால் எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.