பாமகவிற்கு எதிராக பிரச்சாரம்: காடுவெட்டி குருவின் மகள் தடுத்து நிறுத்தம்.!

Viruthambika, daughter of a kaduveti Guru, who was campaigning near Arakkonam, was detained.

அரக்கோணம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தடுத்து நிறுத்தம்.

அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமகவை எதிர்த்து பிரச்சாரம் செய்ய போவதாக காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை தெரிவித்திருந்தார். தனது தந்தை மறைவுக்கு பின் எங்கள் குடும்பத்தை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள் என்றும் பாமக வேட்பாளர்களை எதிர்த்து 23 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வோம் எனவும் விருதாம்பிகை அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், பாமகவை எதிர்த்து அரக்கோணம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகையை மர்ம நபர் ஒருவர் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

பாமகவிற்கு எதிராக பிரச்சாரம்: காடுவெட்டி குருவின் மகள் தடுத்து நிறுத்தம்.!