அமமுகவில் நாளை வேட்பளர் நேர்காணல்., கடைசி நாளான இன்று விருப்ப மனு விநியோகம்.!

ammk has announced that the candidate interview will be held tomorrow and the day after tomorrow on behalf of the People's Progressive League.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்களுடைய கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் நேர்காணல் என கடந்த ஒரு வாரமாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரு கட்சிகளும் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு வழங்கி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. மேலும் இரு கட்சிகளிலும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று முடிவடைந்தது.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என அறிவித்துள்ளனர். அமமுக சார்பில் தேர்தலில் போட்டியிட கடைசி நாளான இன்று விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, அமமுக தலைமையில் கூட்டணி அமையும் என்றும் அம்மாவின் ஆட்சி அமையும் எனவும் கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.