மத்திய பட்ஜெட் தாக்கலால் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு.
நாடாளுமன்றத்தில் இன்று 2023-24 க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில், மத்திய பட்ஜெட் 7 முக்கிய அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
unknown nodeமத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சில வரிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, வரிகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பொருத்து, பொருட்களின் விலையில் ஏற்றம் இரக்கம் காணப்படும். அந்த வகையில், மத்திய பட்ஜெட் தாக்கலால் எந்தெந்த பொருட்களின் விலை உயர்கிறது என்று பார்ப்போம்.
சிகரெட் மீதான வரி 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.கலப்பு ரப்பர் மீதான அடிப்படை இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.தங்கக் கட்டிகளால் செய்யப்பட்ட பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. சமையலறை மின்சார புகைபோக்கிக்கான சுங்க வரி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த வரி உயர்வை சார்ந்த பொருட்களுக்கு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.