'விண்ணில் பாய்ந்த சந்திராயன்-3 விண்கலம்' – குடியரசு தலைவர் வாழ்த்து..!

President wishes all ISRO scientists my best wishes.

Droupadi Murmu

இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என குடியரசு தலைவர் வாழ்த்து.

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, ‘சந்திரயான்- 3’ விண்கலம் விண்ணில் பாய்ந்தது. இதனையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் சந்திரயான்-3 ஐ இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்திற்கான நாட்டின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. சந்திர பயணம் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node