உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் அல்லது மாற்றங்களுக்கு தயாராகுங்கள் – பிரதமர் மோடி!

Prime Minister Modi has warned party MPs to change yourself or get ready for change.

உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் அல்லது மாற்றங்களுக்கு தயாராகுங்கள் என பிரதமர் மோடி கட்சி எம்.பிக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள அம்பேத்கார் சர்வதேச மையத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், பாஜக உறுப்பினர்கள் தாங்களாகவே மாறிக் கொள்ளுங்கள் அல்லது காலப்போக்கில் வரும் மாற்றத்திற்கு தயாராகுங்கள் என கூறியுள்ளார்.

ஏனென்றால், பாஜக உறுப்பினர்களின் வருகை பதிவு மிக மோசமாக இருப்பதாகவும் இந்த பிரச்சனை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இருந்தாலும் தொடர்ந்து அதே தவறு நடக்கிறது. ஒரு பிரச்சனையைச் சுட்டிக்காட்டினால் குழந்தைகள் கூட அதை மீண்டும் செய்வதில்லை. ஆனால் இங்கு அதே தவறு மீண்டும் நடக்கிறது. எனவே உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளுங்கள் என பிரதமர் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.