ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்...!

The Chief Minister is scheduled to hold a consultative meeting today on extending the curfew.

ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் வருகின்ற திங்கள் கிழமையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இன்று காலை முதலமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், மருத்துவத்துறை மற்றும் பொதுத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில், பள்ளி, கல்லூரிகள் திறப்பு மற்றும் தியேட்டர்கள், ஆலயங்கள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.