46வது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஜனவரி 6ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார்.
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னைப் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், 46வது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஜனவரி 6ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார்.
46வது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியானது நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 18 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த புத்தகக் கண்காட்சியானது நாள்தோறும் காலை 11.00 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 800க்கும் மேல் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.