உதயநிதி ஸ்டாலினுடன் இறகு பந்து விளையாடி முதல்வர்...!

இறகு பந்து கூடத்தில் முதல்வர் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் இறகுப்பந்து விளையாடினர்.

இறகு பந்து கூடத்தில் முதல்வர் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் இறகுப்பந்து விளையாடினர்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் வளாகத்தில், ரூ.4 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கு  இறகுப்பந்து விளையாட்டு கூடம், பூங்காக்கள், மழைநீர் கால்வாயுடன் ஓடிய நடைப்பாதை மற்றும் உட்புற சாலை ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி, அமைச்சர்  சேகர்பாபு மற்றும் எம்.எல்.ஏ உதயத்தி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இறகு பந்து கூடத்தில் முதல்வர் ஸடாலினும், உதயநிதி ஸ்டாலினும் இறகுப்பந்து விளையாடினர்.