தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றிய விவகாரம்- இன்று விசாரணை

The administration of Rajiv Gandhi Government Hospital will start an investigation today in the matter of amputating the child's right arm due to wrong treatment

investigation

தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றிய விவகாரத்தில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம், இன்று விசாரணை தொடங்குகிறது

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில்ஒன்றரை வயது முகமதுமகீர் என்ற குழந்தையின் வலது கைஅழுகிய நிலையில் அகற்றப்பட்டது.குழந்தையின் வலது கை அகற்றட்டப்பட்டதாகவும், செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் வலது கை அழுகியதாக பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றிய விவகாரத்தில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம், இன்று விசாரணை தொடங்குகிறது . 3 துறை மருத்துவர்கள் அடங்கிய குழு விசாரணையை மேற்கொள்ள உள்ளது.

குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணையை தொடர்ந்து 2 தினங்களில் விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்பட உள்ளது.