கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன்., ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் – கமல்ஹாசன் ட்வீட்

makkal needhi maiam chairman Kamal Haasan, who will start his election campaign from tomorrow, has been vaccinated against corona.

நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன் என கூறியுள்ளார்.

தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் என கூறி தயாராகிவிடுங்கள் என தெரிவித்துள்ளார். ஒருபக்கம் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வரும் நிலையில், கமல்ஹாசன் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதால் முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுபோன்று திமுக ஆர்எஸ் பாரதி உள்ளிட்ட சில அரசியல் தலைவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node