தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

The curfew has been extended in Tamil Nadu from today till July 5 with additional relaxations.

தமிழகத்தில் இன்று முதல் வருகிற ஜூலை 5 ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் 21 ஆம் தேதி முதல் ஜூன் 28 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலும் இந்த ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கடந்த 25 ஆம் தேதி மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.

இதன்படி, இன்று முதல் வருகிற ஜூலை 5 ஆம் தேதி வரை தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் கூடுதல் தளர்வுகளும் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.