சசிகலா உட்பட 500 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு..!

Death threat case against 500 people including Sasikala

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் சசிகலா உட்பட 500 பேர் மீது ரோசனை காவல்துறையினர் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கருவாடு மீன் ஆகலாம் ஆனால் சசிகலா ஒருபோதும் அதிமுகவின் உறுப்பினர் ஆக முடியாது என சசிகலா குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதனையடுத்து,சசிகலா ஆதரவாளர்கள் சுமார் 500 பேர்,தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சி.வி.சண்முகம் அவர்கள் திண்டிவனம் அருகேயுள்ள ரோசனை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில்,அமைச்சர் அளித்த புகாரின் அடிப்படையில் ரோசனை காவல்துறையினர் சசிகலா உள்பட 500 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.