வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் இன்று பதில் அளிக்கிறார்.
கடந்த 20-ஆம் தேதி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு அரசின் 2023-2024-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு அரசு சார்ந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 21-ஆம் தேதி, தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் பதில்
இந்த நிலையில், வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் இன்று பதில் அளிக்கிறார். நிதிநிலை அறிக்கை மீதான மூன்று நாட்கள் விவாதம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று பதிலளிக்கிறார். அதனை தொடர்ந்து நேரமில்லா நேரத்தில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.