டெல்லி தீ விபத்து – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்...!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி தீ  விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி தீ  விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

தலைநகர் டெல்லியின் மேற்குப் பகுதியில் உள்ள முண்ட்கா ரயில் நிலையம் அருகில் உள்ள 4 மாடி கொண்ட அலுவலக கட்டிடத்தில் நேற்று மாலை திடீரென்று தீப்பிடித்தது. இதனையடுத்து 30 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டன.

இந்த தீ விபத்தில் சிக்கிக் கொண்ட 60 முதல் 70 பேர் மீட்கப்பட்ட நிலையில், 27 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, டெல்லி முதல்வர்  கெஜ்ரிவால் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், டெல்லி தீ விபத்தில் பல உயிர்கள் பரிதாபமாக உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

unknown node