தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இடிக்கப்பட்ட நினைவு சின்னத்தை மீண்டும் நிறுவ வேண்டும் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் இன மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் தூண் அமைக்கப்பட்டது.ஆனால் நேற்று முன்தினம் இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் தூண் புல்டோசர் மூலம் அதிகாரிகள் இடித்தனர்.இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில், இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது கண்டனத்திற்குரியது. இலங்கை அரசு தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இடிக்கப்பட்ட நினைவு சின்னத்தை மீண்டும் நிறுவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
unknown node