தேமுதிக சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து வரும் 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்...!

தேமுதிக சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து வரும் 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.

தேமுதிக சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து வரும் 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.

மத்திய மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் வரும் 5-ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் ஹட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்தும், கொரோனா தொற்று பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.

கட்டுமான பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், மின்சாரம் போன்ற விலைவாசி உயர்வை கண்டித்தும் தேமுதிக சார்பில் வரும் 5 ம் தேதி காலை 10 மணியளவில், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறை அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node