பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்ததா...? எல்.முருகன் கேள்வி!

During the press conference, L. Murugan was confused as to whether the reduction in petrol price came into effect or not.

பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்ததா இல்லையா என எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பின் போது குழம்பியுள்ளார்.

மக்கள் ஆசி யாத்திரையை முடித்துவிட்டு சேலத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 43 அமைச்சர்களும் மக்களிடம் ஆசி பெறும் விதமாக கோவையில் தொடங்கிய யாத்திரையை சேலத்தில் முடித்திருக்கிறோம், மொத்தம் 326 கி.மீ. தூரத்தை கடந்து வந்துள்ளோம் என கூறியுள்ளார்.

பெட்ரோல் விலையை தமிழக அரசு குறைத்து இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அது அமலுக்கு வந்துவிட்டதா? இன்னும் வரவில்லை என கூறியுள்ளார். உடனடியாக செய்தியாளர்கள் இல்லை அமலுக்கு வந்துவிட்டது எனக் கூறியதும், பிறகு ஐந்து ரூபாய் குறைப்பு என்று தானே சொன்னார்கள். ஆனால், மூன்று ரூபாய் தான் குறைத்து உள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்.