சசிகலாவை இணைக்க முயற்சி செய்யவில்லை- அண்ணாமலை விளக்கம்..!

Stalin has been campaigning every month, under every name. It causes confusion in the minds of the people

ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு பெயரில் பிரச்சாரம் செய்து வருகிறார். இது மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது

மயிலாடுதுறையில் பாஜக நிர்வாகி இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி முன்னிறுத்தி தேர்தல் களத்திற்கு செல்கிறோம் என கூறினார்.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க நாங்கள் எந்த முயற்சியையும் செய்யவில்லை. எங்களுக்கு அதுபோன்று செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. சசிகலாவுடன் தனியாகக் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை என்று அண்ணாமலை தெரிவித்தார்.

ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு பெயரில் பிரச்சாரம் செய்து வருகிறார். இது மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என அவர் தெரிவித்தார்.