அமமுக மாவட்ட வாரியான ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டங்கள்- டிடிவி தினகரன் அறிவிப்பு..!

டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருப்பெயரைத் தாங்கி, அம்மா அவர்களின் கொள்கைகளை நெஞ்சில் எந்தி

டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருப்பெயரைத் தாங்கி, அம்மா அவர்களின் கொள்கைகளை நெஞ்சில் எந்தி செயல்பட்டுவரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழக மாவட்டங்கள் வாரியான ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டங்கள் வரும் மார்ச் 18ம் தேதி தொடங்கி ரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கின்றன.

கீழ்காணும் விவரப்படி நடைபெறும் இக்கூட்டங்களில் தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்று அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்று வரும் கழகப் பணிகளை ஆய்வு செய்வார்கள். இந்தக் கூட்டங்களை மாவட்டக் கழக செயலாளர்கள் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வதுடன், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகளும் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

unknown node