திமுகவை வெற்றிபெறச் செய்யத் தவறினால், தற்கொலை செய்து கொள்வேன் – ஜெகத்ரட்சகன் அதிரடி பேச்சு

DMK MP Jegathratchagan says, if I fail to make DMK win in all 30 constituencies, I will commit suicide in this same stage.

புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.நாராயணசாமி முதலமைச்சராக இருந்து வரும் நிலையில், திமுக -காங்கிரஸ் இடையே கூட்டணி நிலைப்பாடு உள்ளது.ஆனால் கடந்த சில நாட்களாக காங்கிரஸ் -திமுக கூட்டணி இடையே உரசல் நிலவி வருகிறது.

அந்த வகையில் இன்று புதுச்சேரி திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் பேசுகையில்,புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற செய்ய வேண்டும்.புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறவில்லை என்றால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்வேன் என்று  தெரிவித்துள்ளார்.