அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு வெளியே அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் திமுக தொண்டர்கள் வாக்குவாதம்...!

DMK workers who had gathered outside Minister Ponmudi's house got into an argument with the enforcement officials.

Minister Ponmudi

அமைச்சர் பொன்முடி வீட்டின் வெளியில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்த்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகங்கள் , விழுப்புரத்தில் அவருக்கு சம்பந்தமான இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், அவரது வீட்டின் முன்பாக திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். இந்த நிலையில், வெளியில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்த்தில் ஈடுபட்டனர்.

திமுக தொண்டர்கள், அமைச்சர் பொன்முடி வீட்டிற்குள் சோதனைக்காக சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் பைகளுடன் சென்றதால், அந்த பையை திரண்டு காட்டுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.