மக்களுக்கு முன்னேற்றம் தருவதே திமுகவின் இலக்கு – மு.க. ஸ்டாலின்

DMK's goal is to make progress for the people - Stalin

அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாக திமுக அரசு செயல்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில்,

அ.தி.மு.க. ஆட்சியால் அனைத்து துறையிலும் தமிழகத்தை 50 ஆண்டு காலத்திற்கு பின்னால் இழுத்துச் செல்லப்பட்டுள்ள நிலைமையை அடியோடு மாற்றி – இந்திய அளவில் தமிழகத்திற்கும் – தமிழக மக்களுக்கும் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும், பெருமையையும் தேடித் தர வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கு. எனது இலக்கு.

ஊழலற்ற – ஒளிவு மறைவற்ற வெளிப்படையான – பெண்களுக்கு பாதுகாப்பான – சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் வகையில் – ஏழை, எளிய நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.