காலை உணவு திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
தமிழ்நாட்டில் 1545 தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1.45 லட்சம் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில்! காலை உணவுடன் கல்வி புகட்டும் கனவுத்திட்டம் அறிவிப்பு. பசி நீக்கி கல்வி தருதல் இடைநிற்றலைத் தடுக்க இனிய வழி. மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சி.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node