அதிமுக வேட்பாளர் தென்னரசுவின் வீட்டின் அருகே உள்ள 124 வது வாக்குச்சாவடியில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் முன்னிலை.
கடந்த மாதம் 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைதேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 12-வது சுற்று எண்ணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் 83 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 31 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் 51,000-க்கும் அதிகமான வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். இந்த நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசுவின் வீட்டின் அருகே உள்ள 124 வது வாக்குச்சாவடியில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், தென்னரசுவை விட அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். அதன்படி அதிமுக வேட்பாளர் தென்னரசு 192 வாக்குகள் பெற்ற நிலையில் இளங்கோவனுக்கு 463 வாக்குகள் கிடைத்துள்ளன.