#Election News: மநீம கூட்டணி சார்பில் போட்டியிடும் சமக (40) தொகுதிகளின் பட்டியல் வெளியீடு.!

The list of constituencies contested by the samathuva makkal Party on behalf of the makkal needhi maiam Alliance has been released.

மக்கள் நீதி மய்யம் கூட்டணி சார்பில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இணைந்து களமிறங்கியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகளும், இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 தொகுதிகளும் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதில் மக்கள் நீதி மய்யம் 154 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் சார்பில் சட்டப்பேரவையில் போட்டியிடும் 70 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை செய்தியாளர்களை சந்தித்து நேற்று முன்தினம் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். இதையடுத்து, இன்று 43 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. கோவை தெற்கில் முதல்முறையாக கமல்ஹாசன் களமிறங்குகிறார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கூட்டணி இருக்கும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வரும் தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் போட்டியிடும் 40 தொகுதிகளின் பெயர் இடம்பெற்றுள்ளது. விரைவில் வேட்பாளர் பட்டியலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown nodeunknown node