தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு – தலைமை அலுவலகத்தில் ஆலோசனை

The AIADMK 2021 assembly Election Reporting Committee is consulting at its head office in Rayapettai at Chennai .

ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் ,இன்று அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் தொடங்கியது.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ,அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில்  சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.2021 தேர்தல் அறிக்கை தொடர்பாக, அமைப்புச் செயலாளர் பொன்னையன் தலைமையில், 11 பேர் கொண்ட குழு, தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.