தமிழ்நாட்டில் முதல்முறையாக உச்சத்தை எட்டிய மின் பயன்பாடு! – செந்தில் பாலாஜி

தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, நேற்று 13/04/2023 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 40 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில்

தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, நேற்று 13/04/2023 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 40 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி  ட்வீட்.

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், வெயில் வெளுத்து வாங்குகிறது. இதானால் மக்கள் அதிகமாக வெளியில் சுற்றுவதை தவிர்த்து வீட்டிற்குள் இருப்பதையே விரும்புகின்றனர். இதனால், வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரிக்கிறது.

உச்சம் தொட்ட மின்பயன்பாடு

unknown node

அதைப்போன்று தான், அலுவலங்கள் மற்றும் தொழில்சாலைகளிலும் மின் பயன்பாடு அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் நேற்று மட்டும் தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, அதிகபட்சமாக 40 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, நேற்று 13/04/2023 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 40 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு 12/04/2023 ல், 39.92 கோடி யூனிட்கள் ஆகும்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node
தமிழ்நாட்டில் முதல்முறையாக உச்சத்தை எட்டிய மின் பயன்பாடு! – செந்தில் பாலாஜி