ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் புதிய நீதி கட்சி அதிமுகவுக்கு ஆதரவு.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ஆம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக பிரதான கட்சிகள் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவை பொறுத்தவரையில், நீண்ட இழுபறிக்கு பின், ஈபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதிய நீதி கட்சி அதிமுகவுக்கு ஆதரவு
unknown nodeஇந்த நிலையில், புதிய நீதிக்கட்சி தலைவர் டாக்டர். ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயன கூட்டணியான பாரதிய ஜனதா கட்சி ஆதரவு தரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முனனேற்றகழக வேட்பாளருக்கு புதிய நீதிக்கட்சியின் மாநில, மாவட்ட தொகுதி, பகுதி நிர்வாகிகள் அனைவரும் தனது முழு ஆதரவு தந்து வேட்பாளரை மாபெரும் வெற்றி பெற செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.’ என தெரிவித்துள்ளார்.
unknown node