மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து 3 நாட்கள் பிரச்சாரம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அந்த தொகுதிக்கு வரும் பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
unknown nodeஇந்த தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வரும் 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்கிறார்.