கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள், 4714 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை நினைவை போற்றக்கூடிய வகையில், மதுரை புது நத்தம் சாலையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 114 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக கலைஞர் நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகம் 6 தளங்கள் கொண்ட நூலகமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், இந்த நூலகத்தில் 6 தளங்களிலும் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறுகிறது. இந்த நூலகம் வரும் 15-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த நூலகத்திற்கு ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள், 4714 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். நீதிபதி சந்துரு அவர்கள் வழங்கிய புத்தகத்தில், 2,492 ஆங்கில புத்தகங்கள் மற்றும் 2,222 தமிழ் புத்தகங்களை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
