#BREAKING: நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

Minister Ma Subramanian insists on exemption from NEET examination.

நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று மதியம் டெல்லி செல்வதாகவும், டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரைச் சந்திக்க உள்ளதாகவும், தடுப்பூசி தட்டுப்பாட்டைப் போக்க செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் உள்ளிட்ட  மொத்தம் 13 கோரிக்கைகளை வைக்க உள்ளதாக நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என கோரி டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனு கொடுத்துள்ளார்.