கட்டணமில்லா பேருந்து – இதுவரை, 258.06 கோடி பயணங்கள் : அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகர பேருந்துகளில் 7,164 சாதாரண நகர பேருந்துகள்  மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகிறது என அமைச்சர் சிவசங்கர் தகவல்.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகர பேருந்துகளில் 7,164 சாதாரண நகர பேருந்துகள்  மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகிறது என அமைச்சர் சிவசங்கர் தகவல்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில், பெண்களுக்கு கட்டணமில்லா இலவச பேருந்து சேவை அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மகளிருக்கான இலவச பேருந்து சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இதன் பல மூலம் இன்று பல பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதுகுறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் தகவல் அளித்துள்ளார். அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகர பேருந்துகளில் 7,164 சாதாரண நகர பேருந்துகள்  மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகிறது.

இதன்மூலம் இதுவரை, 258.06 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது துணையர்களால் 2.05 கோடி கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என டெஹ்ரிவித்துள்ளார்.