திரைப்பட இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் மறைவு – இரங்கல் தெரிவித்து முதல்வர் ட்வீட்..!

— M.K.Stalin (@mkstalin) December 24, 2021

திரைப்பட இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ட்வீட்.

இயக்குனர் சேதுமாதவன் அவர்கள் மலையாள திரையுலகில் மூத்த இயக்குனர் ஆவார். வயது முதிர்வின் காரணமாக இன்று அவர் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘மலையாளத்தின் மாபெரும் எழுத்தாளர்களுடன் இணைந்து பணிபுரிந்த திரைப் படைப்பாளியும், உயரிய பல விருதுகளை வென்ற இயக்குநருமான திரு. கே.எஸ். சேதுமாதவன் அவர்கள் மூப்பின் காரணமாக மறைவுற்றார் என்றறிந்து வருந்துகிறேன். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், திரையுலகினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node