அதிமுக தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்கும் என இறைவனுக்கே தெரியும் என ஓபிஎஸ் பேட்டி.
ஓபிஎஸ் அவர்கள் மதுரையிலிருந்து விமான மூலம் சென்னை சென்றார். அங்கு அவருக்கு கட்சித் தலைவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் உச்சநீதிமன்றம் விசாரணையில் உள்ள அதிமுக தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், இரு கைகளையும் மேலே தூக்கியவாறு இறைவனுக்கே தெரியும் என்று கூறியபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், கடந்த வாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில், இருத்தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.