தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி – அமைச்சர் மனோ தங்கராஜ்

FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்

FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்

கத்தார் நாட்டில் 2022 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த  நிலையில், இந்த FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்.

இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கத்தாரில் நடைபெற்று வரும் FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம் என  பதிவிட்டுள்ளார்.

unknown node